செபறாங் பிறை செப்டம்பர் 16-இல் மாநகராக அறிவிக்கப்படும்

செபறாங் பிறை முனிசிபல் மன்றம் (எம்பிஎஸ்பி) மலேசிய தினமான செப்டம்பர் 16–இல் மாநாகர் தகுதிக்கு உயர்த்தப்படும்.

செபறாங் பிறையை மாநகராக்கும் ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டு விட்டதாகவும் யாங் டி-பெர்துவான் ஆகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரி’ யாதுடின் அல்-முஸ்டபா பில்லா ஷா ஒப்புதல் அளித்துப் பிரகடனத்தில் கையெழுத்திட்டதும் அது மாநகரமாகும் என்றும் மாநில ஊராட்சி, வீடமைப்பு, நகர, புறநகர் திட்டமிடல் குழுத் தலைவர் ஜக்தீப் சிங் டியோ கூறினார்.

செபறாங் பிறை மாநகரானதும் எம்பிஎஸ்பி தலைவர் ரொஸாலி முகம்மட் அதன் மேயராக நியமனம் செய்யப்படுவார்.