மின்னஞ்சல் மோசடிகளுக்கு எதிராக உலகளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 281 பேர் பிடிபட்டனர்.
கைதானவர்களில் 167 பேர் நைஜிரியாவிலும் 74 பேர் அமெரிக்காவிலும் 18 பேர் துருக்கியிலும் 15 பேர் கானாவிலும் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்தது.
மலேசியா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், கென்யா ஆகிய நாடுகளிலும் சிலர் கைது செய்யப்பட்டதாக அது தெரிவித்தது.
“உள்நாட்டு மற்றும் அனைத்துலக சட்ட அமலாக்க அதிகாரிகளின் ஒத்துழைப்பால் இந்த நடவடிக்கை பெரும் வெற்றி பெற்றது”, என அமெரிக்க சட்டத்துறைத் துணைத் தலைவர் ஜெப்ரி ரொசன் கூறினார்