பேரரசர் தம்பதியரை, சமூக ஊடகத்தில் அவதூறாகப் பேசினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் காலிட் இஸ்மாத் கைது செய்யப்பட்டார்.
இதனை, டாங் வாங்கி மாவட்டக் காவல்துறைத் தலைவர், ஏசிபி முகமட் ஃபாமி விஸ்வநாதன் உறுதிபடுத்தியுள்ளார்.
நேற்றிரவு, 10.30 மணியளவில், புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறையின் (ஜே.எஸ்.ஜே) குற்றவியல் புலனாய்வு பிரிவு (யு.எஸ்.ஜே.டி), பிரிவு டி 5, கைது செய்துள்ளது என்ற அவர், மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
அதன்படி, 1948-ஆம் ஆண்டு, தேசத் துரோகச் சட்டத்தின் 4-வது பிரிவின் கீழ், போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
நெட்டிசன்களின் எதிர்மறையான கருத்துகளைத் தொடர்ந்து, துங்கு அஸிஸா தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கைச் செயலிழக்க செய்ததாகக் கூறப்படுகிறது.
- பெர்னாமா