மலேசிய தினத்தையொட்டி இடைவிடாத சிறப்புத் தொலைக்காட்சி நிகழ்ச்சி

மலேசிய தினத்தை முன்னிட்டு தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா பல்வேறு மொழிகளில் அமைந்த சிறப்பு நிகழ்ச்சியொன்றைத் தயாரித்துள்ளது.

இன்று காலை 7 மணி தொடங்கி நாளைக் காலை 9மணிவரை 24 மணி நேரத்துக்குமேல் ஒளியேறும் அந்நிகழ்ச்சி மலேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம்பெறப் போகிறது.

பல்வேறு மொழிகளில் நேயர்களுடன் நேரடி உரையாடல், அரசியல்வாதிகள், நிறுவனத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் முதலானோருடன் நேர்காணல்கள், உரைகள், போட்டிகள் எனப் பல கூறுகளைக் கொண்ட அந்நிகழ்ச்சியை பெர்னாமா செய்தி அலைவரிசை, பெர்னாமா வானொலி, பெர்னாமா. காம் ஆகியவற்றிலும் அச்செய்தி நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களிலும் காணலாம், கேட்கலாம்.

பெர்னாமா