ரோன் 95 விலையில் இப்போதைக்கு மாற்றம் இல்லை- லிம்

நிதி அமைச்சர் லிம் குவான் எங், சவூதி அராபியாவின் எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் நடந்ததால் எண்ணெய் விலை உயருமா என்று வினவப்பட்டதற்கு லிட்டருக்கு ரிம2.08 என்று உள்ள ரோன்95 உச்சவிலையில் மாற்றம் இருக்காது என்றார்.

“இப்போதைக்கு மாற்றம் இருக்காது. அதே வேளையில் மற்ற கூறுகளையும் ஆராய வேண்டியுள்ளது”, என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய லிம், அத்தாக்குதல்களின் விளைவுகளை அரசாங்கம் இன்னமும் கணித்து வருகிறது, அதனால் மலேசிய பெட்ரோலிய தொழில் பாதிக்கப்படலாம் என்றார்.

“பாதிப்பு இருக்கவே செய்யும். பெட்ரோனாசுக்கு வருமானம் அதிகரிக்கும். ஆனால், அரசாங்கத்தையும் சராசரி பயனீட்டாளரையும் பொறுத்தவரை கொடுக்கப்படும் உதவித் தொகையை அது பாதிக்கும்”, என்றார்.

உடனடித் தாக்கத்தை வைத்து எதையும் முடிவு செய்து விட முடியாது, நீண்டகாலத் தாக்கத்தை ஆராய்ந்தே தக்க முடிவெடுக்க வேண்டும் என்றாரவர்