பொது ஒழுங்கை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் அக்மல் சாலே மற்றும் பெர்சத்து இளைஞர் தலைவர் ஹில்மான் இடாம் மற்றும் இரண்டு நபர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அட்டர்னி ஜெனரல் அலுவலகம் அறிவித்துள்ளது.
அக்மல் மீது அவர் செய்ததாகக் கூறப்படும் முகநூல் பதிவிற்காகவும், ஹில்மான் மீது டிக்டோக்கில் செய்ததாகக் கூறப்படும் கருத்துக்காகவும் குற்றம் சாட்டப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இரண்டு குற்றச்சாட்டுகளும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505(b) இன் கீழ் பதிவு செய்யப்படும்.
“அனைத்து குற்றச்சாட்டுகளும் விரைவில் உள்ளூர் அதிகார வரம்பைக் கொண்ட ஒரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்”.
“இந்த நபர்களின் அறிக்கைகள் பொது ஒழுங்கை அச்சுறுத்துவதாகவோ அல்லது இணைய வசதிகள் அல்லது இணைய சேவைகளை முறையற்ற முறையில் பயன்படுத்துவதாகக் கண்டறியப்பட்டது,” என்று AGC இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இறந்த மாணவி ஜாரா கைரினா மகாதிர் ஒரு துணி துவைக்கும் இயந்திரத்தில் வைக்கப்பட்டதாகத் தவறான கூற்றைச் சொன்னதாகக் கூறப்படும் பள்ளி ஆசிரியர்மீதும் பிரிவு 505(b) இன் கீழ் குற்றம் சாட்டப்படும் என்று AGC தெரிவித்துள்ளது.
ஜாரா கைரினா மகாதிர்
மேலும், முன்பு அந்தத் தளத்தில் பிரதமரை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு டிக்-டாக் பயனர், 1998ஆம் ஆண்டுத் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233(1)(a) இன் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள உள்ளார்.
இருப்பினும், குற்றச்சாட்டுகள் தொடர்பான விவரங்களை AGC வழங்கவில்லை, அது குற்றச்சாட்டுடன் தொடர்புடையதா என்பது உட்பட.
பத்திரிகைகளுக்குத் தனித்தனியாக அனுப்பப்பட்ட அழைப்பிதழ்களின்படி, டிக்டோக் பயனர்மீது ஷா ஆலம் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும், அதே நேரத்தில் ஹில்மான் மீது கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். இரண்டு குற்றச்சாட்டுகளும் நாளைக் காலை விசாரணைக்கு வரும்.
முகநூலில் ஒரு அறிக்கையில், அக்மல் தற்போது உம்ரா யாத்திரைக்காக மெக்காவில் இருப்பதாகவும், ஆனால் தனது யாத்திரையை சுருக்கிக் கொண்டு திரும்பி வந்து திங்கட்கிழமை புக்கிட் மெர்தாஜாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாகவும் கூறினார்.
டாக்டர் அக்மல் சலே
“நாட்டின் இறையாண்மையைக் காப்பதற்காக இதுதான் விலை என்றால், நான் ஒரு அங்குலம் கூடப் பின்வாங்கமாட்டேன்.”
“நாம் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் சந்திப்போம்,” என்று அவர் கூறினார்.

























