நெகிரி செம்பிலான் சுகாதாரத் துறை, புகைமூட்டம் மோசமடைவதைத் தொடர்ந்து மேல்நிலை சுவாச மண்டலப் பாதிப்புகள் (யுஆர்டிஐ), கண் பாதிப்புகள், ஆஸ்த்மா தாக்குதல் முதலியவற்றைக் கண்காணித்து வருகிறது.
அக்கண்காணிப்பில் நீலாய் சுகாதார மருத்துவகத்தில் மட்டும் சுவாச மண்டல பாதிப்புகள் 28.5 விழுக்காடு அதிகரித்திருப்பது தெரிய வருவதாக மாநிலச் சுகாதார, சுற்றுச்சூழல், கூட்டுறவு, பயனீட்டாளர் விவகாரக் குழுத் தலைவர் எஸ்.வீரப்பன் நேற்று ஓர் அறிக்கையில் கூறினார்.
கண்பாதிப்புக்கு ஆளானவர் எண்ணிக்கையும் 33.3 விழுக்காடு உயர்ந்துள்ளதாக வீரப்பன் தெரிவித்தார்.
ஆனால், ஆஸ்த்மா பாதிப்பு அதிகரித்திருப்பதாக தெரியவில்லை.
பொதுமக்கள் வெளி நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டுமாய் வீரப்பன் கேட்டுக்கொண்டார்.