புகைமூட்டம் மோசமடைந்து வருவதால் 2,400க்கு மேற்பட்ட பள்ளிகள் இன்றும் நாளையும் மூடப்படுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதனால் 1,732,842 மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பள்ளிகள் மூடப்படும் என்ற தகவலைக் கல்வி அமைச்சு அதன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.
காற்றின் மாசுகேட்டுக் குறியீடு 200 என்ற அளவைத் தாண்டினால் பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்பது கல்வி அமைச்சின் உத்தரவாகும்.
காற்றின் தரம் ஆரோக்கியத்துக்குப் பாதுகாப்பானதல்ல என்று தெரிந்தால் உயர்க் கல்விக் கூடங்களும் வகுப்புகளை ஒத்திவைக்கலாம் என உயர்க் கல்வித் துறை அறிவித்துள்ளது.