முஸ்லிம்- அல்லாதார் பொருள்களைப் புறக்கணிக்கும்படி கூறாதவரை, ‘முஸ்லிம் பொருள்களை வாங்குங்கள்’ இயக்கம் நடத்துவது தவறல்ல என்கிறார் தொழில்முனைவர் மேம்பாட்டு அமைச்சர் முகம்மட் ரிட்சுவான் யூசுப் .
அந்த இயக்கம் இனங்களிடையே பதற்றத்தை உண்டு பண்ணியதற்கு அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதுதான் காரணமாகும் என்றாரவர்.
“பொருள்களை வாங்கச் சொல்லி இயக்கம் நடத்துவதில் தவறில்லை. ஏனென்றால் முஸ்லிம் பொருள்களை வாங்குவதும் முஸ்லிம்-அல்லாதார் பொருள்களை வாங்குவதும் பயனீட்டாளர்களின் விருப்பமாகும். இது ஒரு கட்டுப்பாடற்ற சந்தை. குறிப்பிட்ட பொருளைத்தான் வாங்க வேண்டும் என்று மக்களைக் கட்டாயப்படுத்த முடியாது”, என்றவர் சொன்னார்.