தேர்தல் ஆணையம்(இசி) ஜோகூர், தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கு நாள் குறிப்பது குறித்து விவாதிக்க அக்டோபர் முதல் நாள் கூட்டம் நடத்துகிறது.
அத்தொகுதி காலியானது குறித்து மக்களவைத் தலைவர் முகம்மட் அரிப் முகம்மட் யூசுப் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருப்பதாக இசி செயலாளர் முகம்மட் எலியாஸ் பக்கார் கூறினார்.
அத் தொகுதி எம்பி டாக்டர் முகம்மட் ஃபாரிட் முகம்மட் ராஃபிக் கடந்த சனிக்கிழமை காலமானதை அடுத்து காலியானது.
ஒரு தொகுதி காலியானதும் 60 நாள்களுக்குள் தேர்தல் நடத்தியாக வேண்டும்.