அமைச்சரவை நாளை அதன் கூட்டத்தில் கம்போங் பாரு நில உரிமையாளர்களுக்கு அவர்களின் நிலங்களுக்குக் கொடுக்கப்போகும் விலை குறித்து விவாதிக்கும்.
நிலத்துக்கான விலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பதால் அவ்விவகாரம் அமைச்சரவை மற்றும் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தீர்வு காணப்படும் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் காலிட் அப்துல் சமட் கூறினார்.
“எல்லாரும் உயர்ந்த விலை கொடுக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். ஆனால், அத்திட்டம் சாத்தியமாக வேண்டும் . அதற்கு எது நியாயமான விலை என்பதை நாம் கண்டறியவது அவசியம்”, என்றாரவர்.
கடந்த சனிக்கிழமை, அரசாங்கம் அன்ங்குள்ள நில உரிமையாளர்களுக்கு ஒரு சதுர அடிக்கு ரிம850 கொடுக்க முன்வந்தது. ஆனால், நில உரிமையாளர்கள் அதை ஏற்கவில்லை.
-பெர்னாமா