புகைமூட்டம்: ரியாவ்-இல் அவசரகாலம் பிரகடனம்

இந்தோனேசியாவின் ரியாவ் மாநிலத்தில் காற்றுமாசு குறியீடு(ஏபிஐ) 500-ஐத் தாண்டியதால் புகைமூட்ட அவசரகாலம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

ரியாவ் ஆளுநர் ஷியாம்சுவார் அப்பிரகடனத்தைச் செய்தார். நேற்று தொடங்கி அக்டோபர் 31வரை அவசரகாலம் அமலில் இருக்கும்.

ரியாவில் அவசரகாலம் அற்விக்கப்பட்டதை அடுத்து இந்தோனேசியாவின் பெக்கான் பாருவிலும் ஜம்பியிலுமுள்ள சுமார் 280 மலேசிய மாணவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள் என்று தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம்(நட்மா) கூறியது.

அவர்களில் 160பேர் மலேசியாவுக்கு அழைத்துவரப் படுவார்கள் என்றும் 120பேர் ஜாகார்த்தாவில் உள்ள மலேசியா ஹாலுக்குக் கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் நட்மா இன்று ஓர் அறிக்கையில் கூறிற்று.