எதிர்க்கட்சி தலைவர் பட்ஜெட்மீதான விவாதத்துக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள அரசாங்கம் அவருக்குக் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
கேட்டுக் கொண்டிருப்பவர் எதிர்க்கட்சி எம்பி அல்ல. பிகேஆர் எம்பி ஹசான் கரிம்.
“கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டால்தான் உண்மைகளையும் புள்ளிவிவரங்களையும் வைத்து ஒரு தரமான விவாதத்தை அவரால் நடத்த முடியும், இல்லையேல் வெறும் அலங்காரப் பேச்சாகத்தான் அது அமையும்”, என்றாரவர்.
ஆரோக்கியமான நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் ஒரு முக்கிய புள்ளி என்றும் பாசிர் கூடாங் எம்பி-யான ஹசான் கூறினார்.
தேசிய பட்ஜெட் ஆண்டின் இறுதி நாடாளுமன்றக் கூட்டத்தின் முதல் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.
அதனை அடுத்து எதிரணித் தலைவர் திங்கள்கிழமைக் கூட்டத்தில் பட்ஜெட் மீதான அவரது கருத்துகளை முன்வைப்பார்.
இவ்வாண்டு பட்ஜெட் அக்டோபர் 11-ல் தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.