ஷா அலாம் மரண விசாரணை நீதிமன்றம், தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் “இரண்டுக்கு மேற்பட்டவ நபர்களால் தாக்கப்பட்டதால்” மரணமடைந்தார் என இன்று தீர்ப்பளித்தது.
கடந்த ஆண்டு நவம்பரில் சீ பீல்ட் ஸ்ரீமகாமாரியம்மன் கோவிலுக்கு வெளியில் நிகழ்ந்த கலவரத்தின்போது அங்கு எரியூட்டப்பட்ட கார்களில் தீயை அணைப்பதற்கு அனுப்பப்பட்ட தீ அணைப்புப் படை வீர்ர்களில் அடிப்பும் ஒருவர். கலவரத்தின்போது தாக்கப்பட்டதால் காயங்களிலிருந்து மீளாமலேயே இறந்தார் என மரண விசாரணை நீதிமன்ற நீதிபதி ரோஃபியா முகம்மட் கூறினார்.
41-நாள் நடந்த வழக்கில் சாட்சியங்களின் வாக்குமூலங்களை வைத்து அம்முடிவுக்கு வந்ததாக நீதிபதி கூறினார்.
அடிப்பின் மரணம் ஒரு குற்றச் செயல் என்றவர் சொன்னார்.
“குற்றவாளிகளை நீதிமமுன் நிறுத்துவது போலீஸ் மற்றும் சட்டத்துறைத் தலைவரின் பொறுப்பு”, என்றாரவர்.