அடிப் மரணத்துக்குக் காரணமானவர்களை போலீஸ் நீதிமுன் நிறுத்தும் -முகைதின்

தீயணைப்பு வீரர் அடிப் முகம்மட் காசிமின் மரணம்மீது தீர விசாரணை நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் உறுதி கூறினார்.

24-வயது அடிப் இரண்டு, மூன்று பேரின் குற்றச்செயல்களின் விளைவாகத்தான் உயிரிழந்தார் என்று கொரோனர் ரோஃபியா முகம்மட் அளித்துள்ள தீர்ப்பைப் புத்ரா ஜெயா ஏற்றுக்கொள்வதாக நேற்றிரவு விடுத்த அறிக்கையில் முகைதின் தெரிவித்தார்.

“போலீசார் வழக்கைத் தீர விசாரணை செய்து குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்துவார்கள் என்று நம்புகிறேன்”, என்றாரவர்.