அரசுசார்பற்ற அமைப்பான பூசாட் கோமாஸ், கல்வி அமைச்சு எல்லா சமயங்களையும் நம்பிக்கைகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
பினாங்கு மெதடிஸ்ட் பெண்கள் பள்ளியில் ஒரு விருதளிப்பு நிகழ்வில் கிறிஸ்துவ பிரார்த்தனை செய்யப்பட்டதாகக் கூறப்படுவதற்காக அப்பள்ளிக்குக் கல்வி அமைச்சு கடும் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அந்த என்ஜிஓ அவ்வாறு கூறியது.
“பள்ளிகளில் எல்லா சமயங்களையும் நம்பிக்கைகளையும் மதிப்பதற்குக் கற்றுத் தருவதை அனுமதிக்கக் கல்வி அமைச்சு கற்றுக்கொள்ள வேண்டும்” ,என அந்த என்ஜிஓ இன்று ஓர் அறிக்கையில் வலியுறுத்தியது..
நாட்டின் கல்விமுறை சிறந்த கல்வியை அளிப்பதுடன் ஒற்றுமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் களமாக விளங்கும் வகையில் திருத்தி அமைக்கப்பட வேண்டும், அதில் கல்வி அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என்று பூசாட் கோமாஸ் கேட்டுக்கொண்டது.