கடந்த டிசம்பரில் போலீசால் தடுத்து வைக்கப்பட்ட நால்வருக்கும் தீ அணைப்பு வீரர் முகம்மட் அடிப் முகம்மட் காசிமின் மரணத்துக்கும் தொடர்புண்டு என்பதற்குத் தெளிவான சான்று எதுவும் இல்லை.
ஆதலால் அந்நால்வரும் வெளிநாட்டுக்குத் தப்பி ஓட வேண்டிய அவசியமில்லை என கூட்டரசு சிஐடி (வழக்குத் தொடுத்த, சட்டப் பிரிவு) தலைமை உதவி இயக்குனர் மியோர் ஃபரிடாலாத்ராஷ் வாஹிட் கூறினார்.
“பலரும் அந்நால்வர் பற்றி விசாரிக்கிறார்கள்.
“உண்மையில். அந்நால்வரையும் மட்டும் நாங்கள் கைது செய்யவில்லை. விசாரணைக்கு உதவியாக மொத்தம் 12 பேரைத் தடுத்து வைத்திருந்தோம். எல்லாருமே போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
“அவர்கள் எங்கும் தப்பியோட வேண்டிய அவசியமே இல்லை. எங்கள் புலனாய்வில் அவர்களைச் சம்பவத்துடன் தொடர்புப் படுத்தும் ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை”, என்றவர் சொன்னார்.
நேற்று அம்னோ எம்பி நோ ஒமார் அந்நால்வர் எங்கே என்று கேட்டு அவ்விவகாரத்தை அடுத்த வார நாடாளுமன்றக் கூட்டத்தில் எழுப்பப் போவதாகவும் கூறினார்.