எரிபொருள் பண உதவித் திட்டம் ஜனவரி 1-இல் தொடங்குகிறது

குறிப்பிட்ட தரப்பினரை இலக்காகக் கொண்ட எரிபொருள் பண உதவித் திட்டம் 2020 ஜனவரி முதல் நாள் தொடங்குவதாக உள்நாட்டு வர்த்தக, பயனீட்டாளர் விவகார அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

அத்திட்டத்தின்கீழ் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை உதவித்தொகை உதவிபெற தகுதி பெறுவோர் கணக்கில் நேரடியாகச் சேர்ப்பிக்கப்படும் என்றாரவர்.

“உதவித் தொகை கார்களுக்கு மாதம் ரிம30 ரிங்கிட்டாகவும் மோட்டார் சைக்கிள்களுக்கு மாதம் ரிம12 ரிங்கிட்டாகவும் இருக்கும்”, என்று சைபுடின் செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.

இத்திட்டத்தினால் 2.9 மில்லியன் பேர் பயனடைவர்களாம்