அழியா மை “பாத்வா” என்பது வெறும் தந்திரமே

“எகிப்தியர்கள் நேற்று தேர்தலில் வாக்களித்தனர். எத்தகைய எதிர்ப்புமின்றி அங்கு அழியா மை பயன்படுத்தப்பட்டுள்ளது. 90 விழுக்காடு எகிப்தியர்கள் முஸ்லிம்கள் ஆவர்.”

அழியா மையைப் பயன்படுத்த இசி தயார்

குவினி: அழியா மையைப் பயன்படுத்துவது “ஹராம்” என தேசிய பாத்வா மன்றம் பிரகடனப்படுத்தும் என என் உள்ளுணர்வு கூறுகிறது. அப்புறம் என்ன அவ்வளவுதான். ஒன்றும் செய்ய முடியாது.

அது முஸ்லிம்களுக்கு மட்டும் பொருந்தும் என நான் கருதுகிறேன். அப்படி என்றால் முஸ்லிம் அல்லாதாரைப் பற்றி என்ன சொல்வது? முஸ்லிம் அல்லாதாருக்கு மட்டும் அந்த அழியா மையை தேர்தல் ஆணையம் பயன்படுத்துமா?

அந்த முழு விவகாரமும் அபத்தமானது என நான் எண்ணுகிறேன். அழியா மை பயன்படுத்தப்படாமல் இருப்பதற்கு சில தரப்புக்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் போகும். ஏன் என்பது தான் எனக்குப் புரியவில்லை.

அடையாளம் இல்லாதவன்: எகிப்தியர்கள் நேற்று 30 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன் முறையாக சுதந்திரமான தேர்தலில் வாக்களித்துள்ளனர். எத்தகைய எதிர்ப்புமின்றி அங்கு அழியா மை பயன்படுத்தப்பட்டுள்ளது. 90 விழுக்காடு எகிப்தியர்கள் முஸ்லிம்கள் ஆவர்.

இடைத் தேர்தல் விசிறி: தேசிய பாத்வா மன்றத்துக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பட்டதா? அந்த மைக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? ஏதோ மறைமுகமாக நடப்பதாகத் தெரிகிறது.

அழியா மையைப் பயன்படுத்த ஒப்புக் கொள்வது வெறும் கண்துடைப்பே. இப்போது சமயத்தைக் கொண்டு வருவதால் அது ஒரு போதும் நடக்கப் போவதில்லை. முஸ்லிம்கள் அழியா மையைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்றால் முஸ்லிம் பெண்கள் மருதாணியைப் பயன்படுத்துவதை பற்றி என்ன சொல்வது?  அந்த இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

சக மலேசியன்: தேசிய பாத்வா மன்றம் அதனை ஆட்சேபிக்காது என நான் கருதுகிறேன். காரணம் முக ஒப்பனைப் பொருட்கள், தலைமுடிக்குப் பயன்படுத்தப்படும் சாயம், பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைகள் ஆகியவற்றுக்கு அது எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அத்துடன் அழியா மை நிரந்தரமாக இருக்கப் போவதில்லை. சில தடவைகள் கழுவினால் போய் விடும்.

ஆர்ஆர்: சில முஸ்லிம் தீவிரவாதிகள் உண்மையில் சொந்த மதத்தையே மடத்தனமாக கேலி செய்கின்றனர். தங்களது முட்டாள்தனமான வாதங்கள் மூலம் உலகம் ஏளனம் செய்ய அவர்கள் அனுமதித்துள்ளது இது முதன் முறை அல்ல.

அந்த முட்டாள்கள் இஸ்லாத்தைக் கேலி செய்வதிலிருந்தும் சிறுமைப்படுத்துவதிலிருந்தும் தடுப்பதற்கு பெரும்பான்மை முஸ்லிம்கள் உரக்கக் குரல் கொடுக்க வேண்டும்.

தேர்தலில் அடையாளத்திற்காக மையிடுவது போன்ற சாதாரண விஷயங்களுடன் ஒப்பிடுகையில் மக்கள் நிதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது, ஊழல் போன்ற பெரிய பாவங்கள் பற்றி அவர்கள் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.

மலாயாமூடா: அவர்கள் அந்த மையைக் கண்டு அஞ்சுகின்றனர். ஆனால் ஊழல், மோசடி, திருட்டு ஆகியவற்றைக் கண்டு அஞ்சவில்லை.

ஜெரெமி: பிஎன் சேவகர்களும் கைப்பாவைகளும் அதிக ஆற்றலைப் பெற்று வருகின்றனர். கதைகளை திரிப்பதில், உண்மையை திசை திருப்புவதில், தில்லுமுல்லு செய்வதில் அவர்கள் வல்லவர்களாகி வருகின்றனர்.

அவர்களைப் பொறுத்த மட்டில் வாக்கு மோசடி, மையைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் குறைவான “ஹராம்” ஆகும்.

அம்னோவும் பிஎன்- னும் தொடர்ந்து ஊழலிலும் மோசடிகளிலும் ஈடுபடுவதை நிறுத்த அனைத்து மலேசியர்களும் குறிப்பாக மலாய்க்காரர்கள் இறைவன் பெயரால் விழித்துக் கொள்ள வேண்டும்.

TAGS: