அம்னோ தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதுபோல் எதிரணியுடன் சேர்ந்து ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதில் பக்கத்தான் ஹரப்பானுக்கு வீருப்பமிலலை எனப் பிரதமர் அம்காதிர் முகம்மட் கூறினார்.
“அதில்(புதிய அரசாங்கத்தில்) எங்களுக்கு ஆர்வமில்லை. இது ஒரு பல்லின நாடு. சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை எல்லா இனங்களையும் சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்று வந்துள்ளனர்”, என்று ஹரப்பான் தலைவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கூறினார்.
அம்னோ துணைத் தலைவர் முகம்மட் ஹசான், நேற்று ஓர் அறிக்கையில் மலாய்க்காரர்களுக்காகவும் இஸ்லாத்துக்காகவும் பிஎன், பாஸ் மற்றும் சாபா, சரவாக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் ஒரு புதிய அரசாங்கம் அமைக்க மகாதிருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
மகாதிர், மலேசியாவில் உள்ள எல்லா இனங்களுக்கும் நாட்டில் உரிமை உண்டு என்றார்.
பெர்னாமா
மலேசியா மலேசியருக்கே என்ற கொள்கையில் இணைந்து செயல் பட வேண்டும்.தீவிரவாத கட்சியில் சேர்ந்து இந்த நம்பிக்கை கூட்டணியை அழித்து விடக் கூடாது.