சாபா பிகேஆர் துணைத் தலைவர் முஸ்டபா சக்முட்-டுக்கு முன்னாள் சாபா முதலமைச்சர் சாலே சைட் கெருவாக் பிகேஆரில் சேர்வது பிடிக்கவில்லை. சாலே நஜிப்பின் “நம்பிக்கைக்குரிய ஆதரவாளராக” இருந்தவர் என்றாரவர்.
சாலே பிகேஆரில் சேர்வது உண்மைக்கும் நீதிக்கும் போராடும் கட்சியான அந்தக் கட்சியில் எதிர்மறை தாக்கங்களை உண்டுபண்ணும் என்று இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“ஜிஇ14க்குமுன் சாலே நஜிப்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளராக இருந்தவர். அதன் பின் மதிப்பிழந்து அவமானப்பட்டுத் தோல்வியுற்றார்.
“தொடர்பு மற்றும் தகவல் அமைச்சராக இருந்த அவர் கோட்டா பெலுட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோது, அவர் நஜிப்பின் தளபதியாக செயல்பட்டது பிடிக்காத வாக்காளர்களால் குறிப்பாக இளம் தலைமுறையினரால் நிராகரிக்கப்பட்டார்”, என பிகேஆர் கோட்டா பெலுட் தொகுதி பிகேஆர் தலைவருமான முஸ்டாபா கூறினார்.