அன்வார் இப்ராகிம் கடந்த வார இறுதியில் ஷா ஆலமில் நடைபெற்ற காங்கிரஸ் மாருவா மலாயு-வைச் சிறுமைப்படுத்திப் பேசியதாகக் கூறப்படுவதை மறுத்தார்.
அந்தக் காங்கிரஸ் பற்றிக் குறிப்பிட்டபோது “மாருவா” என்றுதான் சொன்னதாகவும் ”பருவா” என்று சொல்லவில்லை என்றும் விளக்கமளித்த அவர், தம்மீது அபாண்டமாகக் குற்றஞ்சாட்டுவதை “மடத்தனமான அரசியல்” என்றும் சாடினார்.
“பிரதமருடனும் (தற்காப்பு அமைச்சர்) மாட் சாபுவுடனும் வேடிக்கையாக பேசிக் கொண்டிருந்தபோது ) ‘semangat maruah’ என்றுதான் சொன்னேன், பிரதமரும் அதைக் கேட்டார்”, என்றவர் நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக, இணையத்தளத்தில் பதிவிட்டிருந்த பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் தீவிர ஆதரவாளரான கைருடின் அபு ஹசான், ‘பருவா’ என்று அன்வார் சொன்னதாகக் குறிப்பிட்டு அதற்காக அவரைக் கடுமையாகக் குறைகூறினார்..