பக்கத்தான் அரசாங்கம் 2018 மே 8-இல் ஆட்சிக்கு வந்த பின்னர் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலங்களை விற்றதாகக் கூறப்படுவதை நிதி அமைச்சர் லிம் குவான் எங் மறுத்தார்.
முன்னாள் அரசாங்கம்தான் 2010க்கும் 2017க்குமிடையில் ரிம4 பில்லியனுக்குமேல் பெறுமதியுள்ள நிலங்களை விற்றது என்றாராவர்.
“அப்போது பெரும்பாலான அரசாங்க நில விற்பனை நேரடிப் பேச்சுகளின் மூலமாகத்தான் நடந்துள்ளது. திறந்த டெண்டர் முறை கடைப்பிடிக்கப்படவில்லை”, என்றவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
2010க்கும் 2019க்குமிடையில் கோலாலும்பூரில் கூட்டரசு நில ஆணையத்துக்குச் சொந்தமான 14 நிலங்களும் சிலாங்கூரில் இரண்டும் விற்கப்பட்டிருக்கின்றன.