டிஏபி சட்டமன்ற உறுப்பினர் இருவர் கைது: விடுதலைப் புலிகளுடன் தொடர்பா?

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் கைதானதை புக்கிட் அமான் பயங்கரவாத- எதிர்ப்புப் பிரிவுத் தலைவர் ஆயுப் கான் மைடின் பிச்சை உறுதிப்படுத்தினார்.

காடெக் சட்டமன்ற உறுப்பினரும் மலாக்கா ஆட்சிக்குழு(எக்ஸ்கோ) உறுப்பினருமான ஜி.சுவாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் ஆகிய இருவரும் இன்று காலை புக்கிட் அமான் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் 2012 பாதுகாப்புச் சட்டம்(சிறப்பு நடவடிக்கைகள்) அதாவது சோஸ்மாவின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.

அச்சட்டம் 28 நாள்களுக்குத் தடுத்து வைக்க அனுமதிக்கிறது.

மலாக்கா முதலமைச்சர் அட்லி ஜஹாரியும் அவரின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். அதற்கான காரணத்தை அவரால் தெரிவிக்க முடியவில்லை.