அம்பிகா: சோஸ்மாவில் கைது செய்திருக்க வேண்டாம்; அழைத்து விசாரித்திருக்கலாம்

வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் இரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகக் குற்றத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தியது அதிர்ச்சி அளிப்பதாகக் கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் டிஏபி சட்டமன்ற உறுப்பினர்கள் பி.குணசேகரன், ஜி.சுவாமிநாதன் ஆகிய இருவரும் நேற்று கைதானார்கள்.

நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநில சட்டமன்ற உறுப்பினர்களான அவ்விருவரையும் போலீசார் கைது செய்திருக்க வேண்டியதில்லை, அழைத்தே வ்சாரித்திருக்கலாம் என்றாரவர்.