சட்டமன்ற உறுப்பினர்கள் கைது குறித்து ஹரப்பானில் பேசப்பட்டது- சைபுடின்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் இரு டிஏபி சட்டமன்ற உறுப்பினர்கள் கைதான விவகாரம் பற்றி பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் விவாதித்துள்ளனர்.

நேற்று அது குறித்து சாதாரணமாக பேசப்பட்டது என்று தெரிவித்த ஹரப்பான் செயலகத் தலைவர் சைபுடின் அப்துல்லா, அதன்மீது இப்போதைக்கு எம் முடிவும் செய்யப்படவில்லை என்றார்.

“விசாரணை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். அதன் பின்னர் விதிமுறைப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம்”, என்றவர் இன்று குவாந்தானில் கூறினார்.

மலாக்கா, நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர்களான அவ்விருவரும் கடந்த வியாழக்கிழமை தடுத்து வைக்கப்பட்டனர்.