எல்டிடிஇ தொடர்புள்ள ஆசிரியர், சிஇஓ உள்பட ஐவர் கைது

தமிழீழ வ்டுதலைப் புலி (எல்டிடிஇ) தொடர்புள்ளவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கையில் ஆகக் கடைசியாக ஓர் ஆசிரியர், மாநில அரசுத் தொடர்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உள்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் சினமூட்டும் நடவடிக்கைகளைத் தூண்டி விட்டார்கள் எல்டிடிஇ-யை ஆதரித்தார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக புக்கிட் அமான் போலீஸ் சிறப்புப் பிரிவின் பயங்கரவாத- எதிர்ப்பு துணை ஆணையர் ஆயுப் கான் மைடின் பிச்சை செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.

அவர்கள் எல்டிடிஇ தொடர்புள்ள பொருள்களை வைத்திருந்தார்கள் என்றும் அந்த அனைத்துலகப் பயங்கரவாத கும்பலின் நடவடிக்கைகளுக்கு பண உதவி செய்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.