பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர் ரயிஸ் உசேன், நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரியாக வருவதில்லை என்று குறைப்பட்டுக் கொண்டார்.
“பட்ஜெட் 2020 போன்ற முக்கியமான ஒன்று விவாதிக்கப்படும் வேளையில் எம்பிகளின் வருகை படுமோசமாகக் குறைந்துள்ளது.
“நாடாளுமன்றக் கூட்டங்களுக்கு எம்பிகளின் வருகையை அதிகரிப்பது எப்படி? மக்களே உங்களுக்கு ஏதாவது யோசனை தோன்றுகிறதா?”, என இன்று காலை டிவிட்டரில் அவர் பதிவிட்டிருந்தார்.
நேற்று ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுடினும் எம்பிகளின் வருகை குறைந்திருப்பது குறித்து இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டிருந்தார்.
“நான் ‘இந்தக் கூட்டத்தில்’தான் பேசினேன். இது அரசாங்க எம்பிகள் அமர்ந்திருக்க வேண்டிய இடம்”, என்று பெரும்பகுதி காலியாகக் கிடந்த மக்களவை படமொன்றையும் பதிவேற்றம் செய்திருந்தார்.