டிஏபி இளைஞர் பிரிவு மலாயாப் பல்கலைக்கழக துணை வேந்தர் (விசி) அதிகாரத்தைமீறி நடந்து கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டி அவர் பதவி விலக வேண்டுமென்று கோரிக்கை விடுத்தது.
நேற்று மாணவர் இடான் கொன் என் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளா முடியாதபடி தடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து அது அந்தக் கோரிக்கையை முன்வைத்தது.
கொன் முதல் நாள் பட்டமளிப்பு விழாவில் இன்னொரு மாணவர் செய்ததுபோல் எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டத்தில் இறங்குவதைத் தடுப்பதற்காகவே பல்கலைக்கழக துணை போலீசார் அவர் அந்நிகழ்வில் கலந்துகொள்வதைத் தடுத்தனர்.
நேற்று டிஏபி இளைஞர் பிரிவு வெளியிட்ட அறிக்கை ஒரு பட்டதாரி மாணவர் அவருக்குரிய பட்டம் பெறுவதை விசி தடுத்தது அவரது அதிகாரத்தை மீறிய செயலாகும் என்று கூறிற்று.
ரகிமின் அண்மைய செயல்பாடுகள் சிலவற்றைச் உட்டிக்காட்டிய அது, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
“முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆதரவாளர்கள் பல்கலைக்கழகத்துக்கு வெளியில் மாணவ ஆர்வலர்களைத் தாக்கியபோது அவர்(ரகிம்) அவர்களைக் கண்டிக்கவில்லை, மலாய் தன்மாத காங்கிரசில் இனவாத கருத்துகளை வெளியிட்டார், மாணவர் வொங் யான் கெ அரசமைப்பு அளிக்கும் உரிமையைப் பயன்படுத்தி எதிர்ப்புத் தெரிவித்தபோது அவருக்கு எதிராக போலீஸில் புகார் செய்தார், இப்போது ஒரு பட்டதாரி மேடையில் அவருக்குரிய பட்டம் பெறுவதைத் தடுத்துள்ளார்.
“இவை விசி அவரது பொறுப்புகளைச் சரிவரச் செய்யவில்லை என்பதைக் காண்பிக்கின்றன. எனவே அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்”, என்று அவ்வறிக்கை கூறியது.