வேதா: ஒற்றுமை அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, அடிநிலை மக்களின் பொறுப்புமாகும்

நாட்டில் ஒற்றுமையை நிலைநிறுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி.

நாட்டின் நிலைத்தன்மைக்காக அடிநிலை மக்கள் மனத்திலும் ஒற்றுமை உணர்வைப் பதிப்பது முக்கியமாகும்.

“மலேசியாவில் பல இனங்கள், பண்பாடுகள், சமயங்கள், மொழிகள், இருக்கின்றன.

“இந்தப் பல்வகைமையே அதன் தனித்துவம். அதைப் பாராட்ட வேண்டும், அது குறித்துப் பெருமைப்பட வேண்டும். இப் பல்வகைமைத்தான் உலகச் சமுதாயம் பின்பற்ற விரும்பும் ஒரு முன்மாதிரி நாடாக மலேசியாவை ஆக்கி வைத்துள்ளது”, என்று வேதமூர்த்தி கூறினார்.