வாக்குறுதி கொடுத்ததுபோல் 1மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் -பக்கத்தான்

பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் வாக்குறுதி அளித்ததுபோல் அதன் ஐந்தாண்டுக்கால ஆட்சியில் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார்.

இப்போது சுமார் 640,000 வேலைகள் காலியாக உள்ளன. ஆனால், இளைஞர்களில் பெரும்பாலோர் அவற்றில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்றாரவர்.

“கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவோம். இப்போதே 640,000 வேலைகள் உள்ளன. இவை எல்லாமே 3D (ஆபத்தான, அழுக்கான, கடினமான) வேலைகள் அல்ல.

“பிரச்னை என்னவென்றால் வேலை காலியாக உள்ளது. செய்வதற்குத்தான் ஆள் இல்லை”, என இன்று மக்களவையில் இஸ்மாயில் சப்ரி யாக்கூப்பின் கேள்விக்குப் பதலளிக்கையில் குலசேகரன் கூறினார்.