பேராக்கைக் கைப்பற்ற 15வது பொதுத் தேர்தல்வரை காத்திருக்க வேண்டியதில்லை- ஹமிடி

அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, 15வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே பேராக் மாநில அரசைக் கவிழ்க்க முடியும் என்று நினைக்கிறார்.

பேராக மந்திரி புசார் அஹ்மட் பைசல் அஸுமு பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சியான டிஏபி குறித்து குறைசொல்லும் காணொளி ஒன்று இணயத் தளங்களில் வலம் வந்து கொண்டிருப்பது குறித்துக் கருத்துரைத்தபோது ஜாஹிட் அவ்வாறு கூறினார்.

“என்னைப் பொருத்தவரை அது அவர்களின் பிரச்னை. பேராக்கில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் (பக்கத்தான் ஹரப்பானுடன் ஒப்பிடும்போது) எங்களுக்கு இரண்டு இடங்கள்தான் குறைவு.

“(அங்கு) ஏற்கனவே இருவர் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார்கள்.

“15வது பொதுத் தேர்தல்வரை காத்திருக்க வேண்டி இருக்காது என்று நினைக்கிறேன்” என்றாரவர்.