பேராக் எம்பி-இன் காணொளி: பக்கத்தான் தலைவர் மன்றம் விவாதிக்கும்

பேராக் மந்திரி புசார் அஹ்மட் பைசல் அஸுமு பங்காளிக் கட்சியான டிஏபி-யைக் குறைகூறும் சர்ச்சைக்குரிய காணொளி குறித்து பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மன்றம் விவாதிக்கும்.

இதைத் தெரிவித்த பெர்சத்து இளைஞர் தலைவர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான், டிஏபி இஸ்லாத்துக்கு எதிரி என்றும் மலாய்க்காரர்களின் எதிரி என்று எதிர்க்கட்சிகள் கூறிக் கொண்டிருப்பதை நிரூபிக்க முடியுமா என்றும் சவால் விடுத்தார்.

“லிம் கிட் சியாங் கூறுவதை நான் ஏற்கிறேன். இது நாம் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் கவனம் செலுத்த வேண்டிய நேரம்.

“அந்த விவகாரம்(எம்பி காணொளி) குறித்து பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மன்றத்தில் பரிசீலிக்கப்படும்”, என்றாரவர்.