சைபுடின்: ஜாகிர் நாய்க்கைத் திருப்பி அனுப்புவதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை

சர்ச்சைக்குரிய சமய விரிவுரையாளர் டாக்டர் ஜாகி நாய்க்கை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதில்லை என்ற   மலேசியாவின் முடிவில்   மாற்றமில்லை  என்று   வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா   நேற்றிரவு கூறினார்.

அவரைத் திருப்பி அனுப்பாததற்கான காரணத்தை விளக்கி வெளியுறவு அமைச்சு இந்திய அரசாங்கத்துக்கு அதிகாரப்பூர்வ கடிதமொன்றை எழுதும் என்றும் அவர் சொன்னார்.

“அது எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணிந்து மலேசியா எடுத்த முடிவல்ல, சொந்தமாக செய்த முடிவு”, என்றாரவர்.

கடிதம் ஒன்றை அனுப்புவதற்குமுன் அமைச்சரவை ஒப்புதலைப் பெறவும் சட்டத்துறைத் தலைவர் டோம்மி தாமசுடன் கலந்து பேச வேண்டியும் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.