பெய்ஜிங் சென்று கொண்டிருந்த எம்எச்360 கேஎல்ஐஏ-க்குத் திரும்பி வந்தது

மலேசிய விமான நிறுவன விமானமொன்று கோலாலும்பூரிலிருந்து பெய்ஜிங் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்டுச் சென்ற சில மணி நேரங்களில் அது மீண்டும் கேஎல்ஐஏ-க்கே திரும்பியது.

எம்எச் 360 நேற்று மாலை மணி 6.30க்கு கேஎல்ஐஏ-இலிருந்து புறப்பட்டது. பின்னிரவு மணி 12.20க்கு அது சீனா சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்காமல் அது கேஎல்ஐஏ-க்கே திரும்பி வந்தது.

மலேசிய விமான நிறுவன (எம்ஏஎஸ்) அதிகாரி ஒருவர் அதை உறுதிப்படுத்தியதாக ஹரியான் மெட்ரோ செய்தி கூறியது.

ஆனால், விமானம் திரும்பி வந்ததற்கான காரணம் வெளியிடப்படவில்லை.

அதன் பின்னர் இரவு 12.30க்கு ஒரு விமானம் பெய்ஜிங்க்குக்குப் புறப்பட்டுச் சென்றதாக தெரிகிறது. ஆனால், அது அதே விமானம்தானே அல்லது வேறு விமானமா என்பது தெரியவில்லை.