எதிர்வாதம் செய்ய நஜிப்புக்கு நீதிமன்றம் உத்தரவு

நஜிப் அப்துல் ரசாக், எஸ்ஆர்சி நிதியில் ரிம42 மில்லியனை மோசடி செய்தததாக அவர்மீது சுமத்தப்பட்டிருக்கும் 7 குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எதிர்வாதம் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசுத் தரப்பு பெக்கான் எம்பிமீது சுமத்திய குற்றச்சாட்டுகளைச் செவிமடுத்த உயர் நீதிமன்ற நீதிபதி முகம்மட் நஸ்லான் முகம்மட் கசாலி, குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நஜிப் எதிர்வாதம் செய்ய உத்தரவிட்டார்.

தீர்ப்பளிக்கப்பட்டபோது நஜிப் அமைதியாக இருந்தார்.

அரசுத்தரப்பு வழக்கு 58 நாள்களுக்கு நடந்தது. 57பேர் சாட்சியமளித்தனர்.

எதிர்த்தரப்பு வழக்கு டிசம்பர் 3-இல் தொடங்கும் எனத் தெரிகிறது.