நாடாளுமன்றத்தில் துணை அமைச்சர் மயங்கி விழுந்ததால் மன்ற நடவடிக்கைகள் நிறுத்ப்பட்டன

இன்று காலை நாடாளுமன்றத்தில் தொடர்பு, பல்லூடக துணை அமைச்சர் எட்டின் ஷியாஸ்லீ திடீரென்று மயங்கி விழுந்ததை அடுத்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் சிறிது நேரம் நிறுத்தி அமைக்கப்பட்டது.

வீடமைப்பு, ஊராட்சி துணை அமைச்சர் ராஜா கமருல் பஹ்ரின் , பிஎன் -ஜெம்போல் எம்பி சலிம் ஷரிப்பின் கேள்விக்குப் பதிலளித்துக் கொண்டிரிந்தபோது அச்சம்பவம் நிகழ்ந்தது.

எட்டினுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பத்து நிமிட இடைவேளை விடுத்தார் மக்களவைத் துணைத் தலைவர் ரஷிட் ஹஸ்னோன்.

பெயர் குறிப்பிடப்படாத தகவல், பல்லூடக அமைச்சின் அதிகாரி ஒருவர், எட்டின் மூச்சு விட சிரமப்பட்டார் என்றும் அவர் தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்றும் கூறினார்.

மேற்படிச் சமபவத்தை அடுத்து, பக்கத்தான் ஹரப்பான் எம்பி ஒருவர் எல்லா எம்பிகளையும் மருத்துவச் சோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று  பரிந்துரைத்தார்..