லிம்: மசீச ஒதுங்கிக் கொண்டால் டிஏஆர்யுசி-க்கு அரசு நிதி

புத்ரா ஜெயா துங்கு அப்துல் ரஹமான் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு(டிஏஆர்யுசி) குறைந்தது ரிம30 மில்லியன் நிதிஉதவி அளிக்கத் தயாராகவுள்ளது ஆனால், அது மசீச-வின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி வர வேண்டும்.

அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி மையங்களுக்கு அரசாங்க நிதி வழங்க முடியாது என்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

“அரசாங்க நிதியைச் செலவிடுவது தொடர்பான இந்த அடிப்படைக் கொள்கை உலக முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. மலேசியாவில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும், எதிர்க்கட்சிகள் உள்பட, அதை மதிக்கின்றன மசீசவைத் தவிர”, என்று லிம் கூறினார்.

டிஏஆர்யுசிக்கு அரசாங்கம் தொடர்ந்து நிதியுதவி செய்ய வேண்டுமானால் அது நிபுணர்களால் வழிநடத்தப்படும் ஒரு கல்வி மையமாக மாற வேண்டும் என நிதி அமைச்சருமான லிம் கூறினார்.

அந்த வகையில், மசீச “தன்னலம் பாராமல்” டிஏஆர்யுசி முன்னாள் மாணவர் சங்கத்திடம் பொறுப்புகளை ஒப்படைப்பது நல்லது என்றாரவர்.