தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக வழக்கு தொடுப்பதை நிறுத்த மாட்டாராம் வழக்குரைஞர்

மலேசியாவில் தாய்மொழிப் பள்ளிகள் செயல்படுவது அரசமைப்புப்படி சரியா என்று கேள்வி கேட்பதை நிறுத்தப்போவதில்லை என்று சூளுரைத்த வழக்குரைஞர் முகம்மட் கைருல் அசாம் அப்துல் அசிஸ் அடுத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாகக் கூறினார்.

நேற்றைய கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பால் எல்லா முடிந்துபோனதாக நினைக்கவில்லை என்றாரவர்.

“தாய்மொழிப் பள்ளிகள் செயல்படுவது சட்டப்படி சரிதானா என்ற என்னுடைய சவால் முடிவுக்கு வரவில்லை. நேற்று கூட்டரசு நீதிம்னறம் நான் பதிவு செய்த ஒரு மனுவை அரசமைப்பு பகுதி 4(4)-இன்கீழ் விசாரிக்க முடியாது என்று நிராகரித்து விட்டது. அவ்வளவுதான்”, என்றவர் சொன்னார். .

அடுத்து அவர், அதே வழக்கை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப் போவதாக அவரது முகநூல் பக்கத்தில் கூறினார்.

“வழக்கு முடியவில்லை, இப்போதுதான் தொடங்குகிறது”, என்று பார்டி பூமிபுத்ரா மலேசியா (புத்ரா) உதவித் தலைவருமான முகம்மட் கைருல் கூறினார்.