250 போலீசார் போதைப்பொருள் உட்கொண்ட குற்றத்துக்காக கைது

அப்துல் ஹமிட் படோர் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் பொலீஸ் பதவி ஏற்றது முதல் போலீஸ் படையில் 250க்கு மேற்பட்ட போலீஸ்காரர்கள் போதைப்பொருள் குற்றங்களுக்காகக் கைதாகி இருக்கிறார்கள்.

இத்தகவலை வெளியிட்ட உள்துறை துணை அமைச்சர் அசிஸ் ஜம்மான், போலீஸ் துறையில் நிலவும் தவறான செயல்கள் குறித்துத் தகவல் அளிக்கும் அதிகாரிகலுக்கு வெகுமதி கொடுப்பது பற்றியும் அமைச்சு ஆலோசித்து வருவதாகக் கூறினார்.

இன்று டேவான் ரக்யாட்டில் பேசிய அசிஸ் ஜம்மான், மே 23-இலிருந்து 252 அதிகாரிகள் கைதானதாகவும் அவர்கள் போதைப் பொருள் உட்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது என்றும் கூறினார்.