இந்தோனேசிய நகரமான மேடானில் போலீஸ் தலைமையகத்துக்கு வெளியில் தற்கொலை குண்டுதாரி என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் குண்டுகளால் தன்னைத் தகர்த்துக் கொண்டதில் அறுவர் காயமடைந்தததாக போலீசார் தெரிவித்தனர்.
இஸ்லாமிய போராளி ஒருவன் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்மீது தாக்குதல் நடத்தி ஒரு மாதம் ஆகும் வேளையில் இது நடந்துள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட நோக்கம் தெரியவில்லை. ஆனால், உலகில் அதிகமான முஸ்லிம் மக்களைக் கொண்டுள்ள இந்தோனேசியாவில் அண்மைய ஆண்டுகளாகக் வன்முறை தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, போலீஸ்காரர்கள் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.