பிகேஆர் இளைஞர் ஆண்டுக் கூட்டம்: அஸ்மினுக்கு அழைப்பு இரத்தானதால் கட்சியில் சலசலப்பு

டிசம்பர் 8-இல் பிகேஆர் இளைஞர் ஆண்டுக் கூட்டத்தைத் தொடக்கி வைக்கப்போவது யார் என்ற கேள்வி பிகேஆர் இளைஞரிடையே சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளது.

பிகேஆர் இளைஞர் ஆண்டுக் கூட்டத்தைக் கட்சித் துணைத் தலைவர் தொடக்கி வைப்பதுதான் வழக்கம். அதனால் அஸ்மின் அலிதான் டிசம்பர் 6 கூட்டத்தைத் தொடக்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவ்வாண்டு அந்த வழக்கம் மீறப்படுவதாக தெரிகிறது.

இளைஞர் அணி தலைவர் அக்மால் நாசிர், இந்த ஆண்டு இளைஞர் கூட்டத்தை பிகேஆர் ஆலோசகரும் துணைப் பிரதமருமான வான் அப்துல்லா அசிஸ் தொடக்கி வைப்பார் என்று கூறினார்.

இம்முடிவு அக்டோபர் 20-இல், நடைபெற்ற பிகேஆர் இளைஞர் செயல் மன்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்றவர் ஓர் அறிக்கை விடுத்துள்ளார்.

கூட்டத்தைத் தொடக்கி வைக்க அஸ்மின் அலிக்கு அனுப்பப்படவிருந்த அழைப்பை பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இரத்துச் செய்ததைக் கண்டிப்பதாக இளைஞர் அணியின் 25 தலைவர்களில் 21பேர் கூட்டறிக்கை ஒன்றை விடுத்ததை அடுத்து அக்மால் மேற்கண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

இளைஞர் தலைவர்கள் பொதுவில் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்காமல் முறையான வழிகளில் அவர்களின் கருத்துகளைத் தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றும் அக்மால் வலியுறுத்