பேராக் அரசுப் பணியாளர்களுக்கு ஆண்டு இறுதிக்குள் ஒரு மாதச் சம்பளம் அல்லது குறைந்தது ரிம2,000 சிறப்பு நிதி உதவியாக வழங்கப்படவுள்ளது.
இந்த நற்செய்தியை அறிவித்த பேராக் மந்திரி புசார் அஹமட் பைசல் அசுமு, Orang Besar Jajahan-களும் இச்சிறப்பு உதவியைப் பெறுவார்கள் என்றார்.
அது தவிர்த்து பயிற்சிபெறாத ஆசிரியர்களுக்கு, அன்றாட பகுதி-நேர ஊழியர்களுக்கு, பேராக் இஸ்லாமிய சமய விவகாரத் துறை மழலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, இமாம்கள், சியாக்குகள், பிலால்கள், கிராமத் தலைவர்கள், தோக் பத்தின்கள் ஆகியோருக்கும் அச்சிறப்பு உதவித் தொகை கொடுக்கப்படும்.
“பணி ஓய்வு பெற்றவர்களின் பணியைப் பாராட்டும் வகையில் அவர்களும் மாநில அரசின் ஊக்கத் தொகையைப் பெறுவார்கள்”, என்று நேற்று மாநிலச் சட்டமன்றத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது மந்திரி புசார் கூறினார்.
Ivanai velaiya thukenum