ஹிஷாம்: பிஎன் இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியுள்ளது

பாரிசான் நேசனல் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் அது தீர்வுகாண வேண்டிய பிரச்னைகள் நிறையவே உள்ளன என்கிறார் முன்னாள்   அம்னோ   உதவித் தலைவர்   ஹிஷாமுடின் உசேன்.

“இது ஒரு நல்லதொரு தொடக்கம். ஆனால், போக வேண்டிய தூரம் அதிகம். பிஎன் ஒன்றும் குறைகளற்ற கட்சி அல்ல.

“ எங்கள்   குறைகளை அலசி ஆராய வேண்டும். ஆனாலும்,  இது ஒரு புதிய உத்வேகத்தைத் தந்துள்ளது.

“எது எப்படியோ, பயனுள்ள எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.

“இப்போது எங்கள் குரல் கூடியுள்ளது”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.