கொல்லைப்புற வழியில் அரசாங்கம் அமைக்கலாம் என்று பாஸுக்கு அழைப்பு வந்ததாம் ஆனால், அதை நிராகரித்து விட்டதாம். அப்துல் ஹாடி ஆவாங் கூறினார்.
நேற்றிரவு நடைபெற்ற முவாஃபகாட் நேசனல் சிலாங்கூர் கூட்டத்தில் பேசியபோது பாஸ் தலைவர் ஹாடி அந்த அழைப்புப் பற்றித் தெரிவித்ததாக மலேசியன் இன்சைட் செய்தி ஒன்று கூறியது. அந்த அழைப்பை விடுத்தது யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
“பின்புற வாசல் திறந்திருந்தாலும் முன்வாசல் வழியாக செல்வதையே நாங்கள் விரும்புகிறோம்”, என்றவர் கூறினார்.
கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பிடிக்கும் முயற்சி என்ற வதந்தியால் பக்கத்தான் ஹரப்பான் தலைமை மிரண்டு போயுள்ளது என்றார்.
“நடுங்கிப் போனார்கள். ஹரப்பானில் இப்போது ஒரே குழப்பம்”, என்று குறிப்பிட்டவர் பாஸைப் பொருத்தவரை அது நாட்டைக் காக்க விரும்புகிறது என்றார்.
அம்னோ முன்னாள் உதவித் தலைவர் ஹிஷாமுடின் உசேன் டிஏபி மற்றும் அமனா அல்லாத ஒரு அரசாங்கத்தை அமைக்க முயற்சி செய்வதாக ஒரு வதந்தி உலவுகிறது.
ஆனால், ஹிஷாம் அதை மறுக்கிறார்.