புத்ரா ஜெயா பினாங்கைப் புறக்கணிக்கவில்லை- குவான் எங்

நிதி அமைச்சர் லிம் குவான் எங் , புத்ரா ஜெயா நிதி ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை பினாங்கு மாநிலத்தை ”மாற்றான் பிள்ளை” அல்லது “புறக்கணிக்கப்பட்ட பிள்ளை”போல் நடத்துகிறது என்று கூறப்படுவதை மறுத்தார்.

சொல்லப்போனால் ஒதுக்கீடு கூடியுள்ளது. இன்று அவரது நாடாளுமன்ற தொகுதியில் வெளியிட்ட அறிக்கையில் லிம், 2017-இல் பினாங்குக்கு நிதி ஒதுக்கீடு ரிம547 மில்லியனாகவும் 2018-இல் ரிம608 மில்லியனாகவும் இருந்ததாக கூறினார்.

2017-இலும் 2018 ஏப்ரல் வரையிலும் ஆட்சியில் இருந்தது பிஎன்.

அந்த ஒதுக்கீடு 2019 பட்ஜெட்டில் ரிம857 மில்லியனாகவும் 2020 பட்ஜெட்டில் ரிம980 மில்லியனாகவும் உயர்ந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

ஆதாரமின்றிக் குற்றஞ்சாட்டக்கூடாது என்று லிம் கூறினார்.

“பினாங்கின் மேம்பாட்டுக்காக பிஎன் காலத்தில் செய்யப்பட்ட ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது ஹரப்பான் பட்ஜெட்டில் ஒதுக்கீடு அதிகரித்துள்ளது”, என்றாரவர்.