நைஜீரிய மாணவர் மரணம் மீதான விசாரணை ஜனவரியில்

சில மாதங்களுக்குமுன், பிஎச்டி பட்டம் பெறுவதற்காக பயின்று கொண்டிருந்த நைஜீரிய மாணவர் ஒருவர் குடிநுழைவுத் துறையால் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது மரணமடைந்தார். அவர் இறந்ததற்கான காரணத்தைக் கண்டறிய கோலாலும்பூர் கொரோனர் நீதிமன்றம் மரண விசாரணையை ஜனவரியில் நடத்தும்.

தாமஸ் ஓரியோன்ஸ் இவான்சிஹா மரணம்மீதான விசாரணை ஜனவரி 2,3,7,8,9 ஆகிய நாள்களில் நடக்கும் என காலஞ்சென்ற தாமஸின் மனைவியின் வழக்குரைஞர் ராஜேஷ் நாகராஜன் தெரிவித்தார்.