சின் பெங்கின் அஸ்தி மலேசியா கொண்டுவரப்பட்டதைத் தற்காத்துப் பேசியுள்ளார் முன்னாள் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ரகிம் நூர். சின் பெங் தலைமையேற்றிருந்த மலாயா கம்முனுஸ்டுக் கட்சி(சிபிஎம்) இப்போது ஒரு மிரட்டலாக இல்லை என்கிறபோது அவரது அஸ்தியால் என்ன வந்துவிடப் போகிறது என்றவர் வினவினார்.
1989-இல் ஹான் யாய் அமைதி ஒப்பந்தம் கையொப்பமானதை அடுத்து சிபிஎம் ஆயுதப் போராட்டம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்து விட்டது என அப்துல் ரஹிம் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.