மசீச இளைஞர் பிரிவு, அடுத்த ஆண்டு சீனப் பள்ளிகளில் ஜாவி கட்டாயப் பாடமாக்கப்படுவதை எதிர்ப்பதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
“மசீச இளைஞர் பிரிவு ஜாவி பயில்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை அது பகாசா மலேஎசியா பாட நூலில் கட்டாயமாகச் சேர்க்கப்படுவதைத்தான் எதிர்க்கிறது”, என மசீச இளைஞர் தலைவர் வொங் சியாவ் டிங் இன்று கோலாலும்புரில் இளைஞர் பிரிவின் 50 ஆம் ஆண்டுக் கூட்டத்தில் கூறினார்
இவ்விவகாரத்தில் முடிவெடுக்கும் பொறுப்பைப் பள்ளி நிர்வாக வாரியங்களிடமே விட்டு விடலாம் என்று வொங் மேலும் கூறினார்.
நமது அரசியல் சாசனத்தில் உள்ள 152 உறுப்பில் தேசியமொழி மலாய் என்பதனை ஏற்றுக்கொள்வோம் ஆனால் அதில் சாவி எழுத்தை திணிக்க கூடாது.