ஹாடி டிசம்பர் அம்னோ ஏஜிஎம்-இல் கலந்து கொள்வார்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் டிசம்பர் 8-இல் நடைபெறும் அம்னோ ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

அவருடன் இன்னும் பல கூட்டரசுத் தலைவர்களும் மாநிலத் தலைவர்களும் அக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கூறினார்.

“அம்னோ மற்றும் பிஎன்னின் எல்லாத் திட்டங்களிலும் நிகழ்வுகளிலும் பங்கேற்பது முவாஃபகாட் நேசனலில் புரிந்துணர்வையும் செயல்பாடுகளையும் வலுப்படுத்தும் என்று பாஸ் நம்புகிறது. அது மக்களின் நல்வாழ்வுக்கும் நாட்டின் நலனுக்கும் உதவும்”, என்று தகியுடின் ஓர் அறிக்கையில் கூறினார்.